கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ள 9 அநாதை பிணங்களை (அதில் ஓன்று குழந்தை) நேற்று கோவைபுதூர் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு MSW பயிலும் மாணவியர் சுருதி,மாலினி, முதலாமாண்டு Bsc பயிலும் வினித், ஸ்ரீராம், மூன்றாமாண்டு Bsc பயிலும் நிர்மல், நந்தகுமார், இதயனாதன், மற்றும் முதலாமாண்டு BBM பயிலும் தீபக் ஆகிய இந்த 8 பேர்களும், தன்னார்வு தொண்டு நிறுவனமான தோழர் அறக்கட்டளையுடன் இணைந்து அந்த அநாதை உடல்களை நல்லடக்கம் செய்தனர். கோவை அரசு பொது மருத்துவமனையில் 2004 ஆண்டு மார்ச் முதல் இந்த நாள்வரை 1530 ஆதரவற்ற உடல்களை தோழர் அறக்கட்டளை மனித நேயம் கொண்டோரின் உதவியுடன் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளது. அந்த வகையில் நேற்று மாலை 3 மணியளவில் தோழர் அறக்கட்டளை நிருவாகி சாந்தகுமாருடன் இணைத்து கிருஷ்ணா கல்லூரி NSS மாணவ, மாணவியர்கள் அந்த 9 உடல்களை கோவை, பாலக்காடு சாலையில் அமைந்துள்ள ஆத்துப்பாலம் மின் மயானம்
...